உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன் உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும் என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது [எரேமியா 15 : 16] அதற்கு ராஜா பிரதியுத்தரமாக மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார் [மத்தேயு 25 : 40] ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார் பின்பு அவன் பாளயத்துக்குத் திரும்பினான் நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான் [யாத்திராகமம் 33 : 11] இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி நீ பேசு மவுனமாயிராதே நான் உன்னுடனேகூட இருக்கிறேன் உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார் [அப்போஸ்தலர் 18 :9-10] பிதாக்களே நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல் கர்த்தருக்கேற
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். [சங்கீதம் 1:2]