உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன் உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும் என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது
[எரேமியா 15 : 16]
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்
[மத்தேயு 25 : 40]
ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார் பின்பு அவன் பாளயத்துக்குத் திரும்பினான் நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்
[யாத்திராகமம் 33 : 11]
இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி நீ பேசு மவுனமாயிராதே
நான் உன்னுடனேகூட இருக்கிறேன் உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்
[அப்போஸ்தலர் 18 :9-10]
பிதாக்களே நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக
[எபேசியர் 6 : 4]
நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்
[1 தீமோத்தேயு 2 : 3-4]
வாசல்கள் வழியாய்ப் பிரவேசியுங்கள் பிரவேசியுங்கள் ஜனத்துக்கு வழியைச் செவ்வைப்படுத்துங்கள் பாதையை உயர்த்துங்கள் உயர்த்துங்கள் அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள் ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்
[ஏசாயா 62 : 10]
Comments
Post a Comment